நித்தம் நித்தம்
நின்னை நானே
நேசிக்கின்றேன்
நிஜமாய் தானே!!
சத்தம் சபலம்
சலனம் சற்றும்
சிந்தாமலே
சிதறிச் சேர்ந்தேன்!!
பட்டம் பக்கம்
பூக்கள் போல
பஞ்சமின்றி
பூத்து நின்றேன் !!
கட்டம் கட்டி
கனவு கதவை
கட்டிப்போட்டும்
கண்ணுக்குள் வந்தாய்!!
வதன வெட்கம்
விதியின் வழியில்
விதைத்துபோக
விழியில் சேர்ந்தாய்!!
அரவமில்லா அகரம்
அங்குமிங்கும் அசையும்
அகத்தினுள்ளே
அத்தனையும் கண்டுவிடு!!
உனக்கே உனக்காக
உள்ளத்தின் உள்ளே
உன்னதமொன்று
உதிர்த்தேன் - உணர்ந்துவிடு !!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!