தேவதையாய் மண்ணில் வந்தாய்
நட்சத்திரங்களை கண்களாய் சுமந்து வந்தாய்
உன் சின்ன கால்கள் என் கைகளை தொட்டதும்
உன் பிஞ்சு விரல்கள் என் கன்னம் தொட்டதும்
இன்னும் அழியா வியப்பாய் !!
பிரார்த்தனைகளில் நம்பிக்கை கொண்டேன்
எங்கள் பிரார்த்தனைகளின் பலனாய்
நீ நம் வீட்டை சேர்ந்ததால்!!
உன் காலை விடியல் அட்டகாசங்கள்,
நம் வீட்டின் வானவில் பக்கங்கள்!!
உன் மாலை நேர திருவிளையாடல்கள்,
நம் வீட்டில் சேர்க்கும் சிரிப்பு சப்தங்கள்!!
"ச்சீ போ " என்ற சண்டை நிமிடங்களும்,
"அக்கா " என்னும் பாச பிணைப்புகளும்,
கிள்ளி வைத்து ஓடி ஒளியும் கள்ளத்தனமும்,
தூக்கத்தில் கட்டி அணைத்து தூங்கும் மனமும்,
என் மீது நீ கொண்ட பாசம் சொல்லும்!!
உன் மீது நான் வைத்த நேசம் சொல்லும்!!
நமக்குள்ளும் ரகசியங்கள் உண்டு !!
ரகசியங்களை உடைக்கும் நிமிடங்களும் உண்டு !!
நான் செய்யும் கருகிய தோசையும்,
உன் நாவை சேரும் சந்தோசமாய் !!
சுகங்கள் தரும் என் சின்ன தேவதையே!!
என் பக்கங்களை நிரப்பும் சித்திரமே !!
உன் தலை கோதிட என் கைகள் உண்டு !!
உன் கன்னங்களுக்கு என் முத்தங்கள் உண்டு!!
அன்புள்ள தங்கையே!!
முதல் முறை என் பாசம் எழுத்துகளாய்!!
உனக்கே உனக்காக மட்டும்!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!