தமிழை கற்று உலகம் அறிந்ததால்
தமிழன் என்று பெயரிட்டார்கள் !!
விந்தியம் கடந்த காற்றை சுவாசித்ததால்
இந்தியன் நீ என்று சொல்லி சென்றார்கள் !!
மனிதனை மனிதனாய் மட்டும் அங்கீகரிக்கும்
மண்ணின் தேடல் மனிதத்தை தந்திடுமா ...
எனக்கு கல்லறை செய்தால் எழுதிடுங்கள் !!
எனக்கென இந்த உலகம் தந்த பெயரை அல்ல !!
"இது ஒரு மனிதனின் கல்லறை " என்று ...!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!