காலை காபியில் தேநீரையும் கலந்து
விடியலை தொடங்கிய விடுதி நாட்கள் ...
அரைமணி நேர வரிசைக்கு பரிசாய்
கிடைத்த மொறு மொறு தோசை...
ஒரு தடவை கண் அடித்து விட்டு
தோசையை இரணகளம் செய்யும் கைகள் ...
ஒரு வழியாக யுத்தங்கள் வென்று
கல்லூரிக்கு கிளம்பும் படை ஒன்று ...
இறுதி டச்-அப் செய்யும் தோழி ஒருத்தி ...
தன் மனதை கவர்ந்தவனை தேடும் இன்னொருத்தி ...
புத்தகங்களுடன் பேசி வரும் மற்றும் ஒருத்தி ...
வானம் பார்த்து கவிதை சொல்லி நச்சரிக்கும் ஒருத்தி ...
ஜோக் என்ற பெயரில் உயிர் எடுக்கும் ஒருத்தி ...
இந்த பன்முக கூட்டம் நிச்சயம் வகுப்பையும் அடையும்...
தினமும் நடக்கும் கச்சேரியும் ஸ்ருதி தப்பாமல்
வகுப்பில் அழகாய் அரங்கு ஏறிடும் ...
மீண்டும் விடுதிக்கு படை எடுக்கும்போது
தடுக்கி விழும் படலம் நிகழும் ஒருத்திக்கு...
ஐந்து நிமிடம் சிரிப்பு எழுப்பி
மொத்த ஊரின் கவனம் ஈர்ப்போம் முதலில் ...
அடுத்த நொடியில் அழகாய் நிகழும்
' தோள் கொடுப்பாள் தோழி' படலம் ...
மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே
விடுதியை அடையும் அந்த ஊர்வன கூட்டம் ...
இரவு மெனுவில் நூடுல்ஸ் கண்டதும்
பந்திக்கு முந்தும் அத்தனை கால்களும் ...
நூடுல்ஸோடு தயிரை கலக்கும் புரட்சியும் நடக்கும் ...
முல்தானி மெட்டியை நாடும் முகங்களும் மலரும் ...
நட்பின் பக்கங்களை பதிய நினைத்தால்
என் வாழ்நாளும் போதாது ...
நான் அறிந்த வார்த்தைகளும் போதாது...!!!

awesome :) :)
ReplyDeleteThank you...!!!
ReplyDelete