சுழன்று சுழன்று கலைத்து போன
என் உலகமே நீ உறைந்துவிடு !!
புதிதாய் ஒரு பூமி ஒன்றை
படைக்க போகின்றோம் வழி விடு !!
செயற்கையாய் ஒரு கோள் எதற்கு
இயற்கையில் வாழ வழி இருக்கு !!
பிரிவு செய்திடும் மொழி வேண்டாம்
பரிவு பாஷைகள் இனி போதும் !!
எல்லை கோடுகள் இங்கு வேண்டாமே
தேச நேசமும் இங்கு வேண்டாமே!!
அண்டத்தில் ஒரு சிறை செய்வேன்
கடவுளை அங்கேயே நிறுத்தி வைப்பேன் !!
மனிதம் வீசிடும் என் பூமியிலே
புனிதம் வேறொன்றும் தேவை இல்லை!!
பாச நேசங்கள் வளர்த்து வைப்பேன்
ஓட்டு வேஷங்கள் துறக்க வைப்பேன் !!
அரசாங்கம் அங்கு தேவை இல்லை
எங்கள் மூச்சிற்கு வேறு பங்கம் இல்லை !!
ஆசை பாதைகள் போட்டு வைப்பேன்
அன்பு வேதியியல் மட்டும் நிகழச்செய்வேன்!!
புத்தம் புதிதாய் என் சித்தம் கேட்கும்
பூமி ஒன்று வேண்டும் இன்று !!
யுத்தம் காணாத காற்று மண்டலம்
என் சுவாசம் சேரனும் தினந்தோறும் !!
இரத்தம் உறையும் இறுதி நிமிடத்திலும்
புன்னகை சிந்தி உயிர் அடங்கிட வேண்டும் !!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!