என் உள்ளங்கையின் ரேகை எல்லாம்
தவம் செய்து தினம் துடிக்கின்றது
என் ஆயுள்ரேகை நீளச் செய்யும்
உன் நடுவிரலின் தீண்டல் சுமந்திட!!
என் தலையணை என்னை பழிக்கின்றது
கனவில் உன் முகம் இல்லை என்றால்..!!
என் இரவுகள் நகன்றிட மறுக்கின்றது
உன் நினைவுகள் சுமக்கும் நாழிகையால்!!
என் காலைநேர விடியல் எல்லாம்
என் சுடிதார்களுக்குள் சண்டை மூளுது
உன் விழித்திரையில் நிழலாய் மாற !!
என் கன்னத்தசைகள் காத்து கிடக்குது
உன் வருகையால் நிகழும் வெட்க அசைவுக்கு !!
மெல்ல மெல்ல மாற்றம் பிறந்தது!!
என் அழகின் மாற்றம் புதிரை உடைத்தது!!
உன் விரல்கள் மீது நீ தாடை பதித்து
ஓரம் பார்த்த பார்வையில் தொலைந்தேன்!!
புருவம் தூக்கி என் பருவம் வென்றாய்!!
கர்வம் கலைத்து திருடி சென்றாய்!!
என்னுள் உன்னை மெல்ல விதைத்தாய்!!
உந்தன் சிலிர்ப்பை உணரச் செய்தாய்!!
என் கனவே !!
என் சிலிர்ப்பே !!
என் நாடியின் துடிப்பாய் ஆனாயே!!
உனக்குள்ளே என்னை விதைத்தேன் !!
உன்னை திருடியே நான் நானாகின்றேன்!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!