ஒரு வலி மறக்க
ஒரு நொடி துணிந்தான்
ஒரு திசை துறக்க
ஒரு வழியில் யோசித்தான்
தூக்கி சென்ற தோள்களை
தூரம் வைத்து பார்த்தானே
அன்னம் தந்த கைகளையும்
அந்நியம் என்று நினைத்தானோ
பூட்டி கொண்டு அழுதாலும்
பூரணமாய் வாழ்க்கை சொல்வான்
குமுறி குமுறி அழுகின்றோம்
குடையும் கையில் அசைவில்லையே
உன்னை நீயாய் மாய்த்தாயே
உறவின் அர்த்தம் அழித்தாயே
நினைத்து பார்க்க ஒரு நொடிக்கு
நினைவுகள் நங்கள் தரவில்லையா
உன் வலி நீ மறக்க ,
உலகம் விட்டு சென்றுவிட்டாய்!!
சுற்றி சுற்றி பார்த்தாலும்,
சுற்றம் எங்கும் இன்று வலிதானடா !!
புத்தம் புது சுயநலவாதியே!!
தற்கொலை என்று நீ நினைத்தாய்
அட கோழை நண்பா!!
எங்கள் உணர்வை அல்லவா
நீ கொலை செய்கின்றாய் ??
சாவின் விளிம்பு நொடி மட்டும் உனக்கு !!
ஒவ்வொரு நாழிகை வேளையிலும்,
ஒருநூறு ஜீவன் சுவைக்கின்றது,
சாவின் விளிம்பு வலியை - உன்னால்!!
முடிவு என்று நீ நினைத்தாய் !!
முடியாமல் புது வேதனை தொடக்கி சென்றாயே !!