மண்ணில் வந்த நொடி முதலாய் என்னை
கண்ணில் சுமக்கும் ஆண் மகனே !!
தேவதை என்றே என்னை அறிமுகம் செய்வாய்!!
உன் ராணி என்றே என்னை வளர செய்தாய் !!
பள்ளி செல்லும் அவசர நாளிலும்,
நமக்குள் உண்டு விளையாட்டு !!
உன் தோளில் கால்கள் பதித்திடுவேன்..
சிரித்து கொண்டே காலணி அணிவிப்பாய் !!
உன் விரல்கள் பிடித்து ஆடிய நடனங்கள்,
அதுவே என் உலகை அழகாக்கும் நினைவுகள் !!!
உந்தன் மீது கால்கள் போட்டு தூங்கிய நாட்கள் ,
அதுவே என் வாழ்வின் சொர்க்கம் தொட்ட பக்கங்கள் !!
என் இதழ்கள் பேசும் முன்னே,
என் ஆசைகள் அறியும் உன் கண்ணே !!
என் கண்ணில் ஈரம் கண்டால்,
இந்த உலகே உனக்கு பாரமே !!
அப்பா என்று ஆயிரம் முறை அழைத்தாலும்,
கண்ணே என்று மட்டுமே உன் குரல் என்னை அழைக்கும்!!
இருபது முறை ஆடை மாற்றி வந்தாலும்,
சிரிப்புடன் உண்மைகள் சொல்வது தந்தை உள்ளம் மட்டுமே !!
என் பக்கங்களின் முதல் ஆர்வலனே !
என் சத்தங்களின் முதல் ரசிகனும் நீயே !!
அந்த அன்பு அணைப்புகளும்,
என் நெற்றி சுமக்கும் உன் முத்தங்களும்,
சின்ன இமை அசைவும் போதுமே !!
மொத்த உலகையும் சட்டென்று வென்று வர!!!
மகள்கள் மட்டுமே அறிய முடியும்
அப்பா என்ற உச்சரிப்பு தரும் சுகங்களை !!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!