உன் நிழல்படத்தின் பார்வையும்,
என் பார்வைக்கு வெட்கங்கள் தந்துவிடும்..
உன் சட்டையின் மூன்றாம் பட்டனின் மேலே,
என் விரல்கள் ரகசியம் சொல்கின்றது...
என் இதழ் தொட்ட விரல் ,
உன் நெற்றி தீண்டும் போது..
நிஜமாய் கசிந்திடும் உன் நெற்றியில் ஈரம்,
என் காதலின் உணர்வை சொல்லும்...
என் புத்தகம் நடுவே எட்டி பார்க்கும்,
உன் புகைப்படம் செதுக்கிடும் என் நாட்களை...
உன் நிழலுருவம் நிஜமாய் இமைப்பதை,
என் நெஞ்சம் அறிந்து வெட்கம் சுமந்து,
இமைகளை மெல்ல மூடுகின்றேன்...
கனவுகளில் நம் பயணங்களை மீண்டும் தொடர்கின்றேன் ...
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!